கோவையில் எலுமிச்சை விலை கிடுகிடு உயர்வு!

78பார்த்தது
கோவையில் எலுமிச்சை விலை கிடுகிடு உயர்வு!
கோவை அண்ணா மார்க்கெட்டில் எலுமிச்சம்பழ விலை திடீரென உயர்ந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக ஒரு கிலோ எலுமிச்சம்பழம் ரூ. 150 முதல் ரூ. 160 வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது எலுமிச்சம்பழ வரத்து குறைந்துள்ளதால், இன்று ஒரு கிலோ எலுமிச்சம்பழம் ரூ. 200 முதல் ரூ. 230 வரை விற்பனை செய்யப்படுகிறது. இது கடந்த இரண்டு நாட்களில் கிலோவுக்கு சுமார் ரூ. 70 வரை அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு குறித்து வியாபாரிகள் கூறும் போது, முகூர்த்த நாள் என்பதால் தேவை அதிகரித்துள்ளதாகவும், அதனால் விலை உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும், வரத்து குறைவும் விலை உயர்வுக்கு ஒரு காரணம் என்று அவர்கள் கூறினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி