கோவையில் டீக்கடைக்கு சீல்; வியாபாரி கைது

52பார்த்தது
கோவையில் டீக்கடைக்கு சீல்; வியாபாரி கைது
கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில் உள்ள ஒரு டீக்கடையில் போதை பாக்கு விற்பதாக புகார் வந்தது. இதையடுத்து காட்டூர் சப்-இன்ஸ்பெக்டர் அய்யாசாமி மற்றும் போலீசார் அங்கே சென்று சோதனை செய்னர். அப்போது கடையில் 89 கிலோ எடையிலான புகையிலை பொருட்கள் இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கடை உரிமையாளரான ராம் நகரை சேர்ந்த தினேஷ்குமார் (43) என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும் உணவு பாதுகாப்பு அலுவலகத்தினர் மூலமாக ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு இந்த கடை மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி