கோவை, ஆர். எஸ். புரம் பகுதியில் நான்காவது வாரமாக நேற்று நடைபெற்ற ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு ஆடல், பாடல் என உற்சாகமாகக் கொண்டாடினர். முன்னதாக, இரண்டாவது வாரத்தில் ஏற்பட்ட விபத்து சம்பவத்தைத் தொடர்ந்து இந்த முறை டி. ஜே நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு, மெலோடி பாடல்கள் இடம்பெற்றன. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சாண்டா கிளாஸ் வேடமணிந்தவர்களின் வருகையால் குழந்தைகள் மிகவும் உற்சாகமடைந்தனர். மேலும், பொதுமக்கள் தங்கள் செல்லப் பிராணிகளுடன் கலந்து கொண்டதும் இந்நிகழ்ச்சிக்கு கூடுதல் வண்ணம் சேர்த்தது.