கோவையில், ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் வருகின்ற பிப்ரவரி 10-ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில், நேற்று முகூர்த்தக்கால் நடும் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், குண்டங்கள் அமைக்கப்பட உள்ள யாகசாலைக்கான முகூர்த்தக்கால் நட்டும் விழா நடைபெற்றது. இந்த விழாவில், ஹிந்து சமய அறநிலையத் துறை துணை கமிஷனர் விமலா, கோயில் பணியாளர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கடந்த 13 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இந்த கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. கோயில் கோபுரங்கள், ராஜகோபுரம் புனரமைக்கப்பட்டு, கோவில் முழுவதும் வர்ணம் பூசப்பட்டு வருகிறது. பழமையான கோவில் என்பதால் இந்த கும்பாபிஷேக விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.