ஈஷா சார்பில் நடைபெறும் பாரதத்தின் மாபெரும் கிராமப்புற விளையாட்டுத் திருவிழாவான 16-வது ஈஷா கிராமோத்சவத்தின் இறுதி போட்டி இன்று (Dec -29) நடைபெறுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக பிரபல கிரிக்கெட் வீரர் சேவாக் கலந்து கொள்கிறார். தென்னிந்திய அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் இருந்து தேர்வு பெற்ற அணிகள் ஆதியோகியின் முன்பு டிச-29 அன்று நடைபெற உள்ள இறுதிப் போட்டிகளில் கலந்து கொல்கின்றனர்.
5 மாநிலங்களில் மண்டல அளவில் நடைபெற்ற போட்டிகளில் தேர்வான அணிகளுக்கான லீக் மற்றும் அரையிறுதிப் போட்டிகள் டிச 27 மற்றும் 28 ஆம் தேதிகளில் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டிகள் இன்று நடைபெறுகின்றன. இறுதி போட்டிகள் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்காக கோவை வந்திருக்கும் கிரிக்கெட் வீரர் சேவாக், பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற ஆண்டின் இறுதி சனி பிரதோஷ பூஜையில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்துவிட்டு சென்றார். சேவாக்கை பார்த்தவுடன் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள், ரசிகர்கள் என பலரும் அவருடன் செல்பி எடுத்து தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.