மலேசியாவில் யோகா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் பேட்டி

66பார்த்தது
மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச யோகா போட்டியில் கோப்பைகளை தட்டி சென்ற கோவை மாணவர்கள்.
கடந்த மே மாதம் 15ம் தேதி மலேசியாவில் உள்ள Lincoln பல்கலைக்கழகத்தில் சர்வதேச யோகா போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இதில் இந்தியாவை சேர்ந்த பலரும் கலந்து கொண்டு திறமைகளை வெளிபடுத்தினர்.
இந்நிலையில் இப்போட்டியில் முதலிடம் மற்றும் இரண்டாம் இடம் பெற்று வெற்றி பெற்ற கோவை SSVM பள்ளியை சேர்ந்த 5 மாணவர்கள் நிகிலேஷ், ஹரிஸ் கார்த்தி, ஹரி ஷர்வேஷ், அபய், ஷஸ்வத்(2nd place), இந்துஸ்தான் கல்லூரியை சேர்ந்த மாணவர் கெளதம், வேலம்மாள் போதி கேம்பஸை சேர்ந்த மாணவர் கீர்த்தி ரோகன் ஆகியோர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து வாழ்த்து பெற வருகை புரிந்தனர்.
இப்போட்டியில் வெற்றி பெற்றவர்கள் அனைவரும் அடுத்த ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற உள்ள யோகா போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி