கோவை பீளமேடு தண்ணீர்பந்தல் மகேஷ்வரி நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (65). இவரது மனைவி சரோஜா. சுப்பிரமணியன் உடல் நலம் பாதிக்கப்பட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று சரோஜா, கணவனை பார்க்க மருத்துவமனை சென்றார்.
பின்னர் அவரை பார்த்து விட்டு ஆட்டோவில் வீடு திரும்பினார். இறங்கி வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த மர்மநபர் திடீரென அவரது கழுத்தில் கிடந்த 5.5 பவுன் தங்க சங்கிலியை பறித்துவிட்டு தப்பி சென்றார். இதுகுறித்து சரோஜா பீளமேடு போலீசில் அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.