திமுக இளைஞரணி ஆலோசனைக் கூட்டம்

68பார்த்தது
திமுக இளைஞரணி ஆலோசனைக் கூட்டம்
கோவை தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் பொள்ளாச்சி வடக்கு (கி) ஒன்றியம், பெரியநெகமம் பேரூர் கழகம், ஸ்ரீ தங்கவேல் அய்யன் K. V. K திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு அதற்கான விளம்பர போஸ்டர்கள், கடிதங்கள் மற்றும் படிவங்கள் ஆகியவை மாவட்ட துணை அமைப்பாளர்களிடம் வழங்கப்பட்டது.

1. திமுக இளைஞர் அணி நடத்தும் "என் உயிரினும் மேலான. " என்ற தலைப்பில் கலைஞர் நூற்றாண்டு பேச்சுப் போட்டியை செவ்வனே நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

2. கோவை தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட நான்கு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள கல்லூரிகளில் உள்ள சுமார் 500 நபர்களை கலைஞர் நூற்றாண்டு பேச்சு போட்டியில் கலந்துகொள்ள வைக்க கல்லூரிகளுக்கு நேரில் சென்று அதற்கான அழைப்பிதழ் மற்றும் விண்ணப்ப படிவம் கொடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

3. நான்கு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள கல்லூரிகளின் அருகில் கலைஞர் நூற்றாண்டு பேச்சு போட்டிக்கான விளம்பர போஸ்டர்கள் ஒட்ட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

4. கோவை தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட நான்கு சட்ட மன்ற தொகுதிகளிலும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளிலும் 15 நாட்களுக்குள் கலைஞர் நூலகம் அமைப்பது என்று இந்த கூட்டத்தின் மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி