கோவை: லால்மோகன் நினைவு விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்

59பார்த்தது
கோவை: லால்மோகன் நினைவு விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்
கோவை நவக்கரையில் உள்ள ஏ. ஜே. கே. கல்வி நிறுவனங்கள் சார்பில், இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமத்தின் முதன்மை விஞ்ஞானி ஆர். எஸ். லால்மோகனின் நினைவாக, கல்வித் துறையில் சிறந்து விளங்கும் பள்ளிகள், முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன. தமிழகம் முழுவதும் உள்ள தகுதியான ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் இந்த விருதுகளுக்கு மார்ச் 29-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். விருது வழங்கும் விழா ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறும். ஏ. ஜே. கே. கல்வி நிறுவனங்களின் செயலாளர் பேராசிரியர் அஜீத்குமார் லால்மோகன் மற்றும் பலர் விருதுக்கு தகுதி பெறுவோரை சிறப்பு செய்ய உள்ளனர் என ஏ. ஜே. கே. கல்லூரி நிர்வாகம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி