தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் 9வது சீசன் நேற்று கோவையில் தொடங்கியது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், கடந்த ஆண்டு இரண்டாவது இடம் பிடித்த கோவை கிங்ஸ் அணியும் மோதின. 8 அணிகள் பங்கேற்கும் இந்த லீக்கின் முதல் சுற்று ஆட்டங்கள் கோவைகள் நடைபெற உள்ள நிலையில், திருச்சி, சேலம், நெல்லை, திண்டுக்கல் உள்ளிட்ட நகரங்களில் மொத்தம் 32 போட்டிகள் நடத்தப்படுகின்றன. ப்ளேஆஃப் மற்றும் இறுதி போட்டி திண்டுக்கல்லில் நடைபெறும். மொத்த பரிசுத் தொகை ரூ. 17 கோடி, சாம்பியன் அணிக்கு ரூ. 50 லட்சம் வழங்கப்படும்.
நட்சத்திர வீரர்கள் பங்கேற்பு மெகா ஏலத்துக்குப் பிறகு அணிகள் புதிய தோற்றத்தில் களமிறங்கியுள்ளன. முக்கியமாக, ஷாருக்கான், ஆண்ட்ரே சித்தார்த் (கோவை), ஆர். அஸ்வின், வருண் சக்கரவர்த்தி (திண்டுக்கல்), விஜய் சங்கர் (சேப்பாக்கம்) உள்ளிட்டோர் முன்னணி அணிகளில் இடம் பெற்றுள்ளனர். ஐ. பி. எல். தொடரில் சிறப்பாக விளங்கிய சாய் சுதர்சன், வாஷிங்டன் சுந்தர் போன்றோர் இந்திய டெஸ்ட் அணிக்குத் தேர்வாகியிருப்பதால், இந்த லீக்கில் முழுமையாக பங்கேற்பதில்லை.