கோவை: கஞ்சா பிரச்சனை தமிழகத்தில் பரவியுள்ளது -ராதா கிருஷ்ணன்

65பார்த்தது
கோவை விமான நிலையத்தில் நேற்று பத்திரிகையாளர்களிடம் பேசிய மகாராஷ்டிரா ஆளுநர் சி. பி. ராதாகிருஷ்ணன், தமிழகம், தேசிய ஒற்றுமை, பாதுகாப்பு மற்றும் கமலஹாசனின் சமீபத்திய கருத்துகள் குறித்து முக்கியமான கருத்துகளை பதிவு செய்தார். தமிழ் சமஸ்கிருதத்தில் இருந்து பிரிந்த மொழி என்ற கமலஹாசனின் கருத்துக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமே இல்லை என அவர் தெரிவித்தார். கமல் பதவிக்காக பேசுகிறார், அவர் ஒருபோதும் ஒரே நிலைப்பாட்டில் இருக்கவில்லை என்றும், அவர் முன்பு திராவிட இயக்கத்தை எதிர்த்தார், இப்போது அதையே பாராட்டுகிறார் என்றும் கூறினார். தேசிய பாதுகாப்பு தொடர்பாக, இஸ்லாமிய தீவிரவாதமாக இருந்தாலும், எந்தவித தீவிரவாதமாக இருந்தாலும் இரும்புக்கரத்துடன் அடக்கப்பட வேண்டும். அதுவே வளர்ச்சிக்கும் அமைதிக்கும் வழிகாட்டும் என்றார். மத்திய அரசு தமிழுக்கு வழங்கும் நிதி உதவிகளை பாராட்டிய அவர், தமிழகம் மத்திய அரசுடன் ஒத்துழைத்தாலே மாநிலம் முன்னேறும்.
டாஸ்மாக் பிரச்சனை வருத்தமளிக்கின்றதென தெரிவித்த அவர், டாஸ்மாக்கைவிட கஞ்சா பிரச்சனை தமிழகத்தில் பரவியுள்ளது. அதைத் தடுக்க மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
துணைவேந்தர் நியமனத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் மாறுபட்டுள்ள நிலையில், இது சட்டவல்லுனர்கள் மூலம் தெளிவுபடுத்தப்பட வேண்டிய விஷயம் என தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி