கோவை: மின்மாற்றியில் அடிபட்டு உயிருக்கு போராடிய மயில் மீட்பு

83பார்த்தது
கோவை, ராமநாதபுரம், நேதாஜி நகர் பகுதியில் உள்ள மின்மாற்றியில் மயில் ஒன்று அடிபட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், மின்மாற்றியில் அடிபட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மயிலை நேற்று பத்திரமாக மீட்டனர். பின்னர், மயிலுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு மயிலுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மின்மாற்றியில் அடிபட்ட மயிலை உடனடியாக மீட்ட வனத்துறையினருக்கும், தகவல் தெரிவித்த பொதுமக்களுக்கும் வனத்துறை அதிகாரிகள் நன்றி தெரிவித்தனர். காடுகள் அழிக்கப்பட்டு வருவதால், மயில் போன்ற பறவைகள் வனத்தில் இருந்து உணவு மற்றும் நீர் தேடி குடியிருப்பு பகுதியில் புகுவதால் இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படுவதாகவும்,
மின்மாற்றிகள் மற்றும் மின் கம்பங்களுக்கு அருகில் பறவைகள் கூடு கட்டுவதாலும் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதாகவும், மேலும், மின் கம்பிகள் அறுந்து தொங்கினாலோ அல்லது மின்மாற்றிகளில் ஏதேனும் பிரச்சனை இருந்தாலோ உடனடியாக மின்சார வாரியத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பறவைகள் மின் கம்பிகளில் அடிபடுவதை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் கல்யாண பொண்ண கூப்பிடுங்க என்றும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி