கோவை மாவட்டத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட K. G சாவடி காவலர்கள், சந்தேகத்திற்கிடமாக நடந்து கொண்ட இருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்களில் ஒருவர் பொள்ளாச்சியைச் சேர்ந்த மோகன்குமார், மற்றவர் திருப்பூரைச் சேர்ந்த சதீஸ்வரன் எனத் தெரியவந்தது. அவர்களிடம் கையுறை, செல்போன்கள், ஸ்க்ரூடிரைவர் உள்ளிட்ட திருட்டு பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
இவர்கள் K. G சாவடியில் தூங்கிக்கொண்டிருந்த நபரிடமிருந்து செல்போன் திருடியதை ஒப்புக்கொண்டனர். வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதற்காக நேர்த்தியாக பணியாற்றிய காவலர்களுக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் நேற்று பாராட்டுச் சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.