கோவை: கமல் கருத்து சர்ச்சை... கண்டன போஸ்டர்

57பார்த்தது
கமலஹாசன் நடித்துள்ள தக் லைஃப் இசை வெளியீட்டில், தமிழிலிருந்து பிறந்தது தான் கன்னடம் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த கருத்து, கர்நாடகாவில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கன்னட அரசியல் மற்றும் சமூக அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், கமல்ஹாசன் தனது கருத்தில் இருந்து பின்வாங்க மாட்டேன் எனத் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

இந்நிலையில், கோவை பாஜக தெற்கு மாவட்ட தலைவர் சந்திரசேகர் கவுடா தலைமையில், தமிழ் எங்கள் உயிர்மொழி, கன்னடம் எங்கள் தாய்மொழி, கன்னட மொழி விரோதி கமலஹாசன் மற்றும் அவரை ஆதரிக்கும் கட்சிகளை வன்மையாக கண்டிக்கிறோம் எனக் குறிப்பிடும் கண்டனப் போஸ்டர்கள், கோவை மற்றும் பொள்ளாச்சி சாலை பகுதிகளில் நேற்று ஒட்டப்பட்டுள்ளன. 

மொழியியல் நிபுணர்கள் பல்வேறு கருத்துகளை முன்வைத்து வரும் நிலையில், இந்த விவாதம் தமிழ்-கன்னட மாநிலங்கள் இடையேயான மொழிசார்ந்த பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்தி