கோவை; ரூ. 60 லட்சம் தங்கத்துடன் நகைப்பட்டறை ஊழியர் மாயம்

59பார்த்தது
கோவை; ரூ. 60 லட்சம் தங்கத்துடன் நகைப்பட்டறை ஊழியர் மாயம்
கோவை வெறைட்டிஹால் ரோடு உப்பாரா தெருவில் நகைப்பட்டறை நடத்தி வருபவர் சுஹாந்தா ஹசாரா (32). இங்கு தங்க கட்டிகளை ஆபரணமாக வடிவமைத்து பல்வேறு கடைகளுக்கு சப்ளை செய்து வருகின்றனர். இந்த பட்டறையில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த முஸ்தாக் அலி ஷேக் என்பவர் கடந்த 7 ஆண்டுகளாக ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரிடம் அடிக்கடி தங்கத்தை கொடுத்து அதனை ஆபரணமாக செய்து வாங்கி வருமாறு அனுப்புவது வழக்கம். இதேபோல், கடந்த டிசம்பர் மாதம் 965 கிராம் தங்க கட்டியை முஸ்தாக் அலி ஷேக்கிடம் கொடுத்த ஹசாரா அதனை நகை ஆபரணமாக வடிவமைத்து தருமாறு கொடுத்தார். இந்த தங்க கட்டியின் மதிப்பு ரூ. 60 லட்சம் ஆகும். ஆனால், தங்கத்துடன் சென்ற அவர் திரும்பி வரவில்லை. செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்து சுஹாந்தா ஹசாரா வெறைட்டிஹால் ரோடு போலீசில் அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து தங்க கட்டியுடன் மாயமான ஊழியரை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி