வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அனுப்பும் உண்மையான இ-சலான் போல, போலி சலான்கள் அனுப்பி மோசடி செய்வது தொடர்பாக கடந்த ஒரு மாதத்தில் 20க்கும் மேற்பட்ட புகார்கள் கோவை சைபர் போலீசாருக்கு கிடைத்துள்ளன.
போக்குவரத்து விதி மீறலுக்கான அபராதங்களை மொபைல் மூலமாக அனுப்பும் முறையை கையாளும் மோசடிக்காரர்கள், வாட்ஸ்அப்பில் போலி அபராத சலான்கள் மற்றும் பணம் செலுத்தும் போலி லிங்குகளை அனுப்பி பொதுமக்களை ஏமாற்றி பணம் பறித்து வருகின்றனர். வாகனத்தின் புகைப்படம், விதி மீறிய நேரம், இடம், அபராதத் தொகை போன்ற விவரங்களுடன் வரும் இச்செய்திகளில் உள்ள லிங்குகளை கிளிக் செய்தால், வங்கிக் கணக்கிலிருந்து பணம் இழக்கப்படும் அபாயம் உள்ளது. சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கையாக இருந்து, தெரியாத நபர்கள் அனுப்பும் குறுஞ்செய்தி லிங்க்கள் மற்றும் செயலிகளை தவிர்க்க வேண்டும் என கோவை மாநகர காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.