கோவை: கிரிக்கெட் ரசிகர்கள் நிதானமாக செயல்பட வேண்டும்

59பார்த்தது
டிஎன்பிஎல் 9வது சீசனில் லைகா கோவை கிங்ஸ் அணியின் வீரர்கள், கோவை சரவணம்பட்டியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களுடன் கலந்துரையாடி, ரேம்ப் வாக் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வில் பங்கேற்ற லைகா கோவை கிங்ஸ் கேப்டனும், ஐபிஎல் குஜராத் டைட்டன்ஸ் அணியின் வீரருமான ஷாரூக், நிருபர்களிடம் பேசியதில், டிஎன்பிஎல் தொடரில் அணியின் ஆட்டம் மேலும் மெருகேறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதிகம் புதிய வீரர்களுடன் விளையாடுவது ஒரு பலமாக இருப்பதாகவும் கூறினார்.
அத்துடன், ஐபிஎல் வெற்றிக்கொண்டாட்டத்தின் போது பெங்களூரில் நடந்த துயரமான சம்பவம் குறித்து பேசிய அவர், ரசிகர்கள் எப்போதும் நிதானத்துடன், பொறுப்புடன் செயல்பட வேண்டுமென வலியுறுத்தினார். இது போன்ற சம்பவங்கள் இனி நிகழக்கூடாது எனவும் கேட்டுக்கொண்டார்.

தொடர்புடைய செய்தி