கோவை மாவட்டம் பேரூர் பகுதியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா மற்றும் போதைப் பொருள் மாத்திரைகள் விற்ற 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் நேற்று (மே 31) கைது செய்தனர். அவர்களிடமிருந்து 510 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயனுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், பேரூர் துணைக் கண்காணிப்பாளர் சிவக்குமார் மேற்பார்வையில் தனிப்படை போலீசார் ரோந்து சென்றபோது, சந்தேகத்திற்கிடமான கும்பலை மடக்கிப் பிடித்தனர். ராகுல், சக்திவேல், சஞ்சீவ், மனோஜ் குமார், சஞ்சய் ஆகிய ஐந்து பேரும் மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.
போதைப்பொருள் விற்பனை தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.