அன்னூர் அருகே பொதுமக்கள் முற்றுகைப் போராட்டம்!

76பார்த்தது
அன்னூர் அருகே பொதுமக்கள் முற்றுகைப் போராட்டம்!
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள பசூர் ஊராட்சி அம்மா செட்டி புதூர் பகுதியில் தனிநபர் ஒருவர் சாலை மற்றும் நீர்வழிப்பாதையை ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் அமைப்பதை கண்டித்து ஊர் பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். அம்மா செட்டி புதூர் பகுதி விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு அதிகம் உள்ள பகுதியாக திகழ்கிறது. இது கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட எல்லை பகுதியாகவும் உள்ளது. அண்மையில் இங்கு இடம் வாங்கிய தொழிலதிபர் காஸ்டிங் அல்லது இரும்பு ஆலை ஒன்றை நிறுவ திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஆலைக்கு முன்னோட்டமாக ஒரு கிலோமீட்டர் தொலைவிற்கு சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு வரும் நிலையில், ஊராட்சிக்கு சொந்தமான சாலை மற்றும் சாலை ஓரத்தில் உள்ள நீர் வழிப்பாதையை ஆக்கிரமித்து சுற்றுச்சுவரை அமைப்பதாக குற்றம்சாட்டி அம்மா செட்டி புதூர் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காலம் காலமாக கிராம மக்கள் பயன்படுத்தி வந்த சாலையையும், மழை காலங்களில் மழை நீர் வழிந்தோடும் நீர் வழிப்பாதையையும் ஆக்கிரமிப்பு செய்து தனியார் ஒருவர் லாப நோக்கில் செயல்படுவதை தடுக்க வலியுறுத்தி கட்டுமான பணிகளை தடுக்கும் நோக்கில் கட்டுமானங்களுக்குள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி