5 தெரு நாய்களை தாக்கியவர் மீது வழக்குப்பதிவு

70பார்த்தது
5 தெரு நாய்களை தாக்கியவர் மீது வழக்குப்பதிவு
கோவை வடவள்ளி வீனஸ் கார்டன் பகுதியில் தெரு நாய்கள் சிலவற்றை வாலிபர் ஒருவர் அடித்து காயப்படுத்தினார். இது குறித்து விலங்குகள் நல ஆர்வலர் சார்லி மேரி(48) என்பவர் வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், அதே பகுதியை சேர்ந்த கார் டிரைவர் பிரதீப் என்பவர் 5 தெரு நாய்களை தாக்கியது தெரியவந்தது. அவரிடம் விசாரித்தபோது, தான் வீட்டில் வளர்க்கும் கோழியை நாய்கள் கடித்ததால் தாக்கியதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து போலீசார் பிரதீப் மீது விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி