விபத்து - காவல் ஆணையாளர் பேட்டி!

59பார்த்தது
கோவை, உப்பிலிப்பாளையம் மேம்பாலத்தில் இன்று அதிகாலை கவிழ்ந்த கேஸ் டேங்கர் லாரியில் இருந்து கேஸ் கசிவு ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த கோவை மாநகர காவல் ஆணையர், டேங்கரில் உள்ள கேஸ் அதிக அழுத்தத்தில் இருப்பதால், மாற்று பம்புகளைப் பயன்படுத்தி கேஸை வெளியேற்ற வேண்டியிருக்கும் என தெரிவித்தார். தற்போது கேஸ் கசிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், NDRF குழுவினர் விரைந்து வருவதாகவும் கூறினார். டேங்கரில் மொத்தம் 18 டன் எல்பிஜி கேஸ் இருந்ததாகவும், தற்போது எவ்வளவு கேஸ் வெளியேறியது என்பது குறித்த தகவல் இன்னும் கிடைக்கவில்லை என்றும் சுற்றுப்புற பகுதிகளில் கேஸ் கசிவு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவத்தை தொடர்ந்து, விபத்து நடந்த இடத்திற்கு 500 மீட்டர் சுற்றளவில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார் என்றும்,
கேஸ் கசிவு முழுமையாக கட்டுப்படுத்தப்பட்ட பின்னர், டேங்கரை அப்புறப்படுத்தி பீளமேட்டில் உள்ள LPG பிளான்டிற்கு எடுத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது, இந்த சம்பவத்தால் போக்குவரத்து பாதிக்கப்படாமல் இருக்க மாற்று வழிகள் அறிவிக்கப்பட்டுள்ளன என கூறினார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி