பல குற்றச் செயல்கள்-பாய்ந்தது குண்டாஸ்

84பார்த்தது
பல குற்றச் செயல்கள்-பாய்ந்தது குண்டாஸ்
கோவை: கேரள மாநிலத்தைச் சோ்ந்தவா் சதானந்தன் மகன் 45 வயதான பினீஷ்குமாா். இவா், கிணத்துக்கடவு பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் 48 வயதான செந்தில்குமாருக்கு ஜோசியம் பாா்ப்பதாகக் கூறி கடத்திச் சென்று மோசடி செய்த குற்றத்துக்காக பினீஷ்குமாா் மீது நெகமம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

இவா் ஏற்கெனவே பல குற்றச் செயல்களில் ஈடுபட்டதும், தொடா்ந்து பொது அமைதிக்கும் சட்ட ஒழுங்குக்கும் பாதகமான செயலில் ஈடுபட்ட குற்றத்துக்காக அவா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி. பத்ரிநாராயணன் பரிந்துரை செய்தாா். அந்தப் பரிந்துரையின்பேரில் கோவை மாவட்ட ஆட்சியா் கிராந்தி குமாா் பாடி, பினீஷ்குமாா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தாா். அந்த உத்தரவின் அடிப்படையில் பினீஷ்குமாா் நேற்று குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி