பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்த உக்கடம் மேம்பாலம்

76பார்த்தது
பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்த உக்கடம் மேம்பாலம்
கோவை உக்கடம் மேம்பாலத்திலிருந்து சுங்கம் செல்லும் வழி, பொது மக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

ஆத்துப்பாலம் சந்திப்பில் இருந்து உக்கடம் நோக்கி மேம்பாலத்தில் வரும் வாகன ஓட்டிகள், சுங்கம் சந்திப்பு செல்வதற்கான வழித்தடம் நேற்றிலிருந்து (செப்.,12) பயன்பாட்டுக்கு வந்தது. இனி, சுங்கம் சந்திப்பில் இருந்து செல்வோரும் உக்கடம் மேம்பாலத்தை பயன்படுத்தலாம்.

உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரை, ரூ. 481.95 கோடி செலவில் மாநில நெடுஞ்சாலைத்துறையால் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 9 அன்று முதல்வர் ஸ்டாலின் இப்பாலத்தை பயன்பாட்டுக்கு துவக்கி வைத்தார். அப்போது, சுங்கம் சந்திப்பில் இருந்து வாலாங்குளம் ரோட்டில் வரும் வாகன ஓட்டிகள் மேம்பாலத்தில் செல்வதற்கான ஏறு தளம் மற்றும் ஆத்துப்பாலம் சந்திப்பில் இருந்து வருவோர் இறங்குவதற்கான தளம் அமைக்கப்படாமல் இருந்தது.

இப்பணியை ஆகஸ்ட் மாத இறுதிக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. விபத்துகளைத் தவிர்க்க, தேவையான இடங்களில் சாலை பாதுகாப்பு ஒளிப்பான் ஒட்டவும், அறிவிப்பு பலகை வைக்கவும், மின் விளக்குகள் பொருத்தவும் அறிவுறுத்தப்பட்டது. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, வாகனங்கள் வெள்ளோட்டம் விடப்பட்டன. ஆத்துப்பாலம் சந்திப்பில் இருந்து வருவோர் சுங்கம் செல்வதற்கு உக்கடம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள இறங்கு தளம் மூலமாக இறங்கிச் செல்லலாம்.

தொடர்புடைய செய்தி