தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரின் போது தமிழக முதல்வர், விவசாயிகள் பயன்பெறுகின்ற வகையிலும் நீர்நிலைகளை தூர்வாரி ஆழப்படுத்தினால் அதிக அளவில் நீர் சேமிக்கப்பட்டு நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்ற வகையிலும் தேங்கி கிடக்கும் வண்டல் மண்ணை எடுத்து விவசாய நிலங்களில் போடுவதால் மண்வளம் பெருகும் என்ற நோக்கத்திலும் வட்டாட்சியர் மூலம் அனுமதி பெற்று டிராக்டர்களில் வண்டல் மண் எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவித்தார். அதன் அடிப்படையில் இணைய வழியில் விண்ணப்பித்து சில நிபந்தனைகளுடன் வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது"