செஞ்சேரி: பொது சுடுகாடு தீர்மானம் நிறைவேற்றம்

55பார்த்தது
கோவை மாவட்டம், செஞ்சேரி அம்பேத்கர் நகரில் வசிக்கும் அருந்ததியர் சமூக மக்கள், இறந்த பின்னர் தங்களது உடலை பொது சுடுகாட்டில் அடக்கம் செய்ய அனுமதிக்கப்படாத நிலை குறித்து கடும் வேதனை தெரிவித்துள்ளனர். 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இந்த பகுதியில், இறந்தவர்களை தனி இடத்தில் அடக்கம் செய்ய வேண்டிய அவல நிலை நீடித்து வருகிறது. மழைக்காலங்களில் அந்த இடம் மிகவும் அசுத்தமாக மாறி, சுகாதார கேடுகளை ஏற்படுத்துகிறது. 

இது குறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கிராமத்தில் தீண்டாமை வேலி அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் சமூக நல்லிணக்கம் பாதிக்கப்படுவதாகவும் கிராம சபைக் கூட்டத்தில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த 2/10/2021 அன்று எஸ் குமாரபாளையம் ஊராட்சி சார்பாக நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், இது தொடர்பாக மனு அளிக்கப்பட்டது. இருப்பினும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சாதிய வேற்றுமையை கூர்மைப்படுத்தும் வண்ணம் அடக்கம் செய்யும் குட்டைமேட்டின் சிறு பகுதியைச் சுற்றியும் வேலி அமைத்துள்ளனர் என மக்கள் குற்றம்சாட்டி நேற்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் வலியுறுத்தினர். வேலியை அகற்றக்கோரி நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொடர்புடைய செய்தி