மக்கள் தொடர்பு முகாம்

78பார்த்தது
மக்கள் தொடர்பு முகாம்
கோவை: கோவை வடக்கு வட்டம் கூடலூர் தெற்கு கிராமத்தில் வரும் ஆக. 14ம் தேதி கலெக்டர் கிராந்திகுமார் பாடி தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவை வடக்கு வட்டம் கூடலூர் தெற்கு கிராமத்தில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் (தாரஹா மஹாலில்) வரும் ஆக. 14ம் தேதி காலை 10. 30 மணிக்கு கலெக்டர் கிராந்திகுமார் பாடி தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெறவுள்ளது.

கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியர் கூடலூர் தெற்கு கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் வரும் ஆக. 1ம் தேதி காலை 11 மணிக்கு அனைத்து துறை அலுவலர்கள் முன்னிலையில் பொதுமக்களிடம் தங்கள் மனுக்களை அளிக்கலாம். இந்த மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் விசாரணை மேற்கொள்ளப்படும். இதனையடுத்து மனுதாரர்களுக்கு வரும் ஆக. 14ம் தேதி நடைபெறவுள்ள மக்கள் தொடர்பு முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி