நகைகளை பறித்த மர்ம ஆசாமிகள்

158பார்த்தது
நகைகளை பறித்த மர்ம ஆசாமிகள்
கோவை சரவணம்பட்டி சிவானந்தபுரம் ஆனந்தநகரை சேர்ந்தவர் ராஜூ. இவரது மனைவி 45 வயதான உஷா ராணி, இவர் அங்குள்ள அரசு பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
இவர் நேற்று சரவணம்பட்டி ஜனதா நகர் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் திடீரென அவரது கழுத்தில் கிடந்த 6. 5 பவுன் தங்க செயினை பறித்தனர், அவர் அதிர்ச்சியில் திருடன், திருடன் என கூச்சல் போட்டார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வருவதற்குள் மர்ம நபர்கள் பைக்கில் மின்னல் வேகத்தில் மறைந்தனர். இது தொடர்பாக உஷா ராணி சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து நகை பறித்து தப்பிய மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி