கேக்கில் விஷம் தடவி சாப்பிட்டு தாய், தந்தை மகளுடன் தற்கொலை

4220பார்த்தது
கேக்கில் விஷம் தடவி சாப்பிட்டு தாய், தந்தை மகளுடன் தற்கொலை
கோவை கவுண்டம்பாளையம் டி. வி. எஸ். நகர் ரோடு ஜவஹர் நகரை சேர்ந்தவர் கணேசன் (65). மனைவி விமலா (55). இவர்களுக்கு தியா காயத்ரி (25) என்ற மகள் இருந்தார். இவர் ஐ. டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர்களின் சொந்த ஊர் கேரள மாநிலம்.

காயத்ரிக்கும், கோவை வடவள்ளியை சேர்ந்த ஐ. டி. நிறுவன ஊழியர் தீட்சித் என்பவருடன் கடந்த ஆண்டு நவம்பர் 3-ந் தேதி திருமணம் நடந்தது. காயத்ரிக்கும், அவருடைய கணவர் தீட்சித்துக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதனால் அவர் கோவையில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார்.

இதனை நினைத்து மனமுடைந்த தந்தை கணேசன், தாய் விமலா, மகள் தியா காயத்ரி ஆகியோர் வீட்டிற்குள் 3 பேரும் கடந்த 21-ந் தேதி கேக்கில் விஷத்தை தடவி அதை சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டனர்.

தகவலின் பேரில் கவுண்டம்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் 3 பேரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி