கோவை சரவணம்பட்டி அருகே பள்ளி மாணவர்களுக்கு எஸ்ஐபி சார்பில் மேற்கு மண்டல அளவிலான அபாகஸ் போட்டி நடைபெற்றது. இதில், கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த எஸ்ஐபி அபாகஸ் மாணவர்கள் ஆயிரம் பேர் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினராக கார்மல் கார்டன் பள்ளி முதல்வர் உஷாராணி கலந்துகொண்டார்.
இரண்டு சுற்றுகளாக நடந்த அபாகஸ் போட்டியில், பெருக்கல், காட்சி எண் கணித தொகைகளை உள்ளடக்கிய 300 கணித தீர்வுகளுக்கு 11 நிமிடத்தில் மாணவர்கள் தீர்வு கண்டனர். இதில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கம், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்த அபாகஸ் பயிற்சி பெறுவதன் மூலம் மாணவர்களின் அறிவாற்றல், கணித திறன், கல்வி கற்பதில் ஆர்வம் அதிகரிப்பதாக பெற்றோர் தரப்பில் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.