வங்கி அதிகாரி வீட்டில் கேஸ் அடுப்பு, சிலிண்டர் கொள்ளை!

61பார்த்தது
வங்கி அதிகாரி வீட்டில் கேஸ் அடுப்பு, சிலிண்டர் கொள்ளை!
கோவை சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார். இவர் கோவையில் அரசு வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் விநாயகர் சதுர்த்தி விடுமுறையை ஒட்டி வீட்டை பூட்டி விட்டு சொந்த ஊருக்கு சென்றிருக்கிறார், அவர் நேற்று முன்தினம்(செப்.9) இரவு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டில் நகை பணம் வைத்திருக்காததால் அடுப்பு சிலிண்டர் வீட்டு வாசலில் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை திருடி சென்றது தெரியவந்தது. உடனடியாக இதுகுறித்து அவர் நேற்று(செப்.10) சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். கைரேகை நிபுணர்கள் உதவியோடு வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி