கோவை, வடமதுரையில் இருந்து தடாகம் செல்லும் தாளியூர் பன்னிமடை சாலையில் நேற்று இரவில் காட்டு யானைகள் குட்டிகளுடன் கூட்டமாக சாலையில் நின்றதால் வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பேசிய அப்பகுதி விவசாயிகள், இரவு நேரங்களில் யானைகள் தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. கால்நடைகளுக்கான உணவுகளை உண்டு தீயிட்டுச் செல்கின்றன. இதனால் நாங்கள் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலையில் உள்ளோம் என்று வேதனை தெரிவித்தனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினரிடம் புகார் செய்துள்ளனர். வனத்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு யானைகளை வனப்பகுதிக்குள் அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.