கோவை: வாகனத்தை தாக்க முயன்ற காட்டு யானை- வீடியோ வைரல்!

2பார்த்தது
கோவை வெள்ளியங்கிரி மலை பகுதியில், காட்டு யானைகளை விரட்ட சென்ற வனத்துறையினர் மீது ஒற்றை யானை நேற்று இரவு ஆக்ரோசமாக தாக்க முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவில் அருகே உள்ள தண்ணீர் பந்தல் பகுதியில், ஒரு யானை விவசாய தோட்டத்திற்குள் நுழைய முயன்றதை தடுக்கும் பணியில் வனத்துறையினர் இரு வாகனங்களில் சென்றனர். அப்போது, வனத்திற்குள் சென்ற யானை திடீரென வாகனங்களை நோக்கி தாக்கும் வகையில் முனைந்த காட்சிகள் செல்போன் மூலம் பதிவாகி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி