கிறிஸ்துவ மக்களின் முக்கிய பண்டிகையான கிறிஸ்துமஸ் பண்டிகையை உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக கோவையில் உள்ள புனித மைக்கேட் ஆலயத்திலும் கிறிஸ்துமஸ் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஆலயம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. கோவை மறை மாவட்ட ஆயர் தாமஸ் ஆக்வினாஸ் இயேசு கிறிஸ்துவின் உருவபொம்மையை காண்பித்து இயேசு பிறப்பை அறிவித்தார். தொடர்ந்து குடிலில் இயேசு கிறிஸ்து வைக்கப்பட்டு சிறப்பு திருப்பலி, ஆராதனை நடைபெற்றது. இந்த கிறிஸ்துமஸ் விழாவில் ஆயிரக் கணக்கான மக்கள் கலந்து கொண்டு இயேசுவை பிரார்த்தனர்.