கோவை துடியலூரில் நடைபெற்ற 54-வது ஆண்டு மாநில அளவிலான டெக்ஸ்மோ கோப்பை மற்றும் 24-வது ஆண்டு மாவட்ட அளவிலான அக்வாடெக்ஸ் கோப்பை கைப்பந்து போட்டிகளில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐ. ஓ. பி) அணி சாம்பியன் பட்டம் வென்றது. இறுதிப் போட்டியில் இந்தியன் வங்கி அணியை 25-9, 25-22, 25-20 என்ற செட் கணக்கில் வீழ்த்தி நேற்று வெற்றிபெற்றது.
வெற்றியடைந்த ஐ. ஓ. பி. அணிக்கு ரூ. 60, 000 மற்றும் சாம்பியன் கோப்பை வழங்கப்பட்டது. இந்தியன் வங்கி (ரூ. 50, 000), சுங்கத் துறை (ரூ. 45, 000), அக்வா பம்ப் ஸ்போர்ட்ஸ் கிளப் (ரூ. 40, 000), தமிழ்நாடு காவல்துறை (ரூ. 35, 000) அணிகளும் முறையே 2-ம் முதல் 5-ம் இடங்களைப் பெற்றன. போட்டிகளை ஏ. ஜெ. மார்ட்டின் சுதாகர் தொடங்கி வைத்தார். வெங்கிடபதி தலைமை வகிக்க, விவேகானந்தன் முன்னிலை வகித்தார்.