கோவை: பொது இடத்தில் குப்பை கொட்டியவருக்கு 5000 ரூபாய் அபராதம்

54பார்த்தது
கோவை மாநகராட்சி பகுதிகளில் பொது இடங்களில் குப்பை கொட்டுவது தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் பகுதியில் இருந்து போத்தனூர் செல்லும் நஞ்சுண்டாபுரம் பாலத்தின் கீழ் கடந்த 25ஆம் தேதி பொது இடத்தில் குப்பையை கொட்டிய நபர், CCTV கண்காணிப்பு மூலம் காவல்துறை உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
நேற்று இந்நபர் மீது திடக்கழிவு மேலாண்மை விதிகளை மீறியதற்காக ரூபாய் 5000/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சி ஆணையர், பொது இடங்களில் குப்பை கொட்டுவது சட்டவிரோதமானது என்றும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி