கோவை அரசு மருத்துவமனையில் புத்தாண்டு தினத்தில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளன.
புத்தாண்டு கொண்டாட்டம் உலகம் முழுவதும் நேற்று (ஜனவரி 1) களைகட்டியது. பொதுமக்கள் தங்கள் உறவினர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துத் தெரிவித்து நண்பர்களுடன் ஆடிப்பாடிக் கொண்டாடினர்.
ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு தினத்தில் அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகள் எண்ணிக்கை விவரங்கள் கோவையில் வெளியிடப்படுகின்றன. அந்த வகையில் கோவை அரசு மருத்துவமனையில் நேற்று 3 ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளன.
புத்தாண்டு தினத்தில் பூமிக்கு புதுவரவாய் வந்துள்ள அழகிய குழந்தைகளுக்கு அரசு மருத்துவமனை பணியாளர்கள் பொதுமக்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.