கோவை: மத்திய அரசை கண்டித்து ம. ம. இ ஆர்ப்பாட்டம்

75பார்த்தது
கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, மத்திய மற்றும் மாநில அரசுகள் குழந்தைகளின் கல்வி நிதியை வழங்கவில்லை என்பதை கண்டித்தும், மத்திய அமைச்சர் அமித்ஷாவின் தமிழ்நாடு வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தியது.
ஆர்ப்பாட்டத்தில் கல்வி உரிமை சட்ட நகல்கள் கிழிக்கப்பட்டன. பின்னர் தலைவர், ஈஸ்வரன் பேசிய போது, மத்திய-மாநில அரசுகளின் பிரச்சனையால் தமிழகத்தில் 5 லட்சம் குழந்தைகள் பள்ளிக்குச் சேர முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். அமித்ஷா தமிழகத்தை உடனடியாக விட்டு வெளியேற வேண்டும் என்றும், எதிர்காலத்தில் மத்திய அமைச்சர்கள் தமிழகத்திற்கு வருவார்கள் என்றால் கடும் போராட்டங்கள் நடைபெறும் என்றும் எச்சரித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி