கோவை: இளையராஜாவுக்கு தொழில் சிறப்பு விருது!

66பார்த்தது
கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இசைஞானி இளையராஜாவுக்கு ரோட்டரி கிளப்பின் உயரிய தொழில் சிறப்பு விருது நேற்று வழங்கப்பட்டது. விருது பெற்ற பிறகு உரையாற்றிய இளையராஜா, நான் பேச்சாளர் அல்ல, பட்டாளி. என் பாடு பாட்டாகிறது. கோவையில் என் காலடி படாத இடமில்லை. என் அண்ணன் வாங்கி தந்த ஹார்மோனியம் கோவையில் தயாரிக்கப்பட்டது. இன்று வரை அதில் தான் பாடல்களை கம்போஸ் செய்கிறேன். எனக்கும் கோவைக்கும் உள்ள தொடர்பை பிரிக்க முடியாது, என நெகிழ்ச்சியுடன் கூறினார். இந்த நிகழ்வில் ரசிகர்கள் அவருக்கு பூங்கொத்து, ஓவியங்கள் வழங்கி புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி