கோவை மத்திய பேருந்து நிலைய இருசக்கர வாகன நிறுத்தும் இடத்தில் அதிக கட்டணம் வசூலிப்பதாகப் புகார் எழுந்துள்ளது. நேற்று வாகன உரிமையாளரிடம் ரூ. 160 கட்டணம் கேட்ட ஊழியர், கணக்கு கேட்டதற்கு மிரட்டல் விடுத்ததாகப் பாதிக்கப்பட்டவர் குற்றம் சாட்டியுள்ளார். வாகனங்களை முறையாக நிறுத்தாததால் கீறல்கள் ஏற்படுவதாகவும், கட்டணம் கேட்டால் மிரட்டுவதாகவும் பிற வாகன உரிமையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.