கோவை: 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள எலக்ட்ரிக் கார் திருட்டு!

72பார்த்தது
கோவை சிங்காநல்லூர் திருச்சி சாலையில் உள்ள தனியார் கார் ஷோரூமில் ரூ. 20 லட்சம் மதிப்புள்ள எலக்ட்ரிக் கார் ஒன்று திருடப்பட்டது. சிசிடிவி விசாரணையில், மோட்டார் சைக்கிளை பெட்ரோல் பங்கில் நிறுத்தி ஒரு மர்மநபர் காரை திருடிச் சென்றது தெரியவந்தது.
சிங்காநல்லூர் போலீசார் அறிவுறுத்தியபடி, அந்த மோட்டார் சைக்கிளை எடுக்க வந்த கர்ணன் என்ற நபரை பெட்ரோல் பங்க் ஊழியர்கள் நேற்று பிடித்து ஒப்படைத்தனர். விசாரணையில், தொண்டாமுத்தூரை சேர்ந்த கர்ணன், வாடகை மோட்டார் சைக்கிள் ஓட்டும் தொழிலாளி என்பதும், கார் வாங்க வசதியில்லாததால் திருடியதும் தெரியவந்தது.
அந்த காரின் சாவி உள்ளே இருந்ததை பயன்படுத்தி எளிதில் திருடியதாகவும், ஆடம்பர வாழ்வு நோக்கில் இச்செயலைச் செய்ததாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் இவர் கடந்த காலத்தில் இதுபோன்ற திருட்டுகளில் ஈடுபட்டுள்ளாரா என்பதை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி