கோவை: அம்மாவின் பெயரில் ஒரு மரம் - மத்திய அமைச்சர்

75பார்த்தது
கோவை, தடாகம் சாலையில் உள்ள மாநில வன பணிக்கான மத்திய உயர்ப் பயிற்சியக, வன மரபியல் மற்றும் மர வளர்ப்பு நிறுவன வளாகத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற ஆலோசனை குழு கூட்டத்தில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் கால நிலை மாற்றத் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் கலந்து கொண்டார். நேற்று இக்கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் கீர்த்திவர்தான் சிங் மற்றும் நாடாளுமன்ற ஆலோசனை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

முன்னதாக பயிற்சியக வளாகத்தில் மத்திய அமைச்சர் அவர்கள் அம்மாவின் பெயரில் ஒரு மரம் எனும் திட்டத்தின் கீழ் தனது தாயின் பெயரில் மரக்கன்று நட்டு வைத்தார். அதனைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் தலைமையில் நாடாளுமன்ற ஆலோசனை குழு கூட்டம் நடைபெற்றது. இதில் வன நிலப்பரப்பு பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் மற்றும் திட்டங்களின் நிலை குறித்து ஆலோசிக்கப்பட்டது. 

பின்பு, வன பணிக்கான உயர் பயிற்சி மைய வளாகத்தில் உள்ள வன உயிரின அருங்காட்சியகத்தினை மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் பார்வையிட்டார். அவரோடு நாடாளுமன்ற ஆலோசனை குழு உறுப்பினர்கள் மற்றும் மத்திய, மாநில வனத்துறை உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி