கோவை: 9-ம் வகுப்பு மாணவர் தற்கொலை

66பார்த்தது
கோவை: 9-ம் வகுப்பு மாணவர் தற்கொலை
மதுரையைச் சேர்ந்த தண்டீஸ்வரி என்பவரின் மகன் சந்தோஷ் (வயது 14). இவர் கோவை குனியமுத்தூரில் தனது சித்தி உமாராணி வீட்டில் தங்கி, அங்குள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். சந்தோஷ் பள்ளிக்கு சரியாக செல்லவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து ஆசிரியர்கள் உமாராணியிடம் தெரிவித்துள்ளனர். உமாராணி தனது அக்கா தண்டீஸ்வரியிடம் கூறியதால், அவர் சந்தோஷை கண்டித்துள்ளார்.

 இந்நிலையில், உமாராணி வேலைக்கு சென்றுவிட்டு மாலை வீட்டிற்கு வந்தபோது, சந்தோஷ் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். அதிர்ச்சியடைந்த உமாராணி அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் சந்தோஷை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சந்தோஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து குனியமுத்தூர் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி