கோவை: லாட்டரி விற்ற 2 பேர் கைது

63பார்த்தது
கோவை: லாட்டரி விற்ற 2 பேர் கைது
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றதாகக் காட்டூர் மற்றும் துடியலூர் போலீசார் இருவரைக் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து லாட்டரி சீட்டுகளும், 5800 ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டன.காட்டூர் போலீசார் காந்திபுரம் மத்திய பஸ் நிலையப் பகுதியில் ரோந்து சென்றபோது, சுருளி பாண்டி (37) என்பவர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரைக் கைது செய்தனர்.இதேபோல், கு. வடமதுரை பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்ற கலா (52) என்பவரைத் துடியலூர் போலீசார் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்தும் நேற்று லாட்டரி சீட்டுகள் மற்றும் 5800 ரூபாய் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி