கோவையைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் ஃபெடெக்ஸ் நிறுவனத்திலிருந்து தொடர்பு கொண்டு, மும்பையிலிருந்து சிங்கப்பூருக்கு அனுப்பிய பார்சலில் பிரச்சனை உள்ளது எனக் கூறி, கைது செய்யப்படுவீர்கள் என்று மிரட்டியுள்ளார் இளைஞர் ஒருவர். பின்னர், ரிசர்வ் வங்கி சரிபார்ப்பு காரணமாக 1300432 ரூபாயை ஆன்லைனில் செலுத்த தூண்டப்பட்டுள்ளார். மோசடியை உணர்ந்த பெண் கோவை சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். விசாரணையில், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சந்தீப் திவாரி (34) என்பவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.