தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை தொழிலாளர்கள் சங்கத்தின் AITUC* சார்பில் இன்று மாநிலம் தழுவிய அளவில் மாவட்ட தலைநகரங்களில் நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக கோயம்புத்தூர் சிவானந்தா காலனி பவர் ஹவுஸ் அருகில் காத்திருப்பு போராட்டம் சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ் பிரபு அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தில் மாவட்ட முழுவதும் இருந்து பல்வேறு கிராம ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த தூய்மை பணியாளர்கள் தூய்மை காவலர்கள் மேல்நிலைத் தொட்டி இயக்குபவர்கள் கணினி இயக்குபவர்கள் பள்ளி சுகாதாரப் பணியாளர்கள் கிராம சுகாதார உறுப்பினர்கள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர்.