உக்கடம் புது பாலத்தில் விபத்து; பைக்கில் சென்ற இளைஞர் பலி

61பார்த்தது
உக்கடம் புது பாலத்தில் விபத்து; பைக்கில் சென்ற இளைஞர் பலி
கோயம்புத்தூர் உக்கடம் - ஆத்துப்பாலம் இடையே போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மேம்பாலம் கட்டப்பட்டது. சுங்கம், உக்கடம், பொள்ளாச்சி ரோடு, பாலக்காடு ரோடு ஆகிய பகுதிகளில் ஏறுதளம், இறங்குதளம் வசதிகளுடன் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வெள்ளலுார் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன், கோபி (26) உக்கடம் மேம்பாலத்தில், ஆத்துப்பாலத்தில் இருந்து உக்கடம் நோக்கி இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்று கொண்டிருந்தார். அதிவேகமாக சென்றதால் தடுமாறி கீழே விழுந்தார். தலையில் ஹெல்மெட் அணியாததால் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

தொடர்ந்து ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து இன்று (செப்.,13) கோயம்புத்தூர் (மேற்கு) போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி