கோவை செல்வபுரம் பேரூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் முகமது கரீம் (55). இவர் தள்ளுவண்டியில் தின்பண்டங்கள் வியாபாரம் செய்து வருகிறார். நேற்று செல்வபுரம் இந்திராநகர் செல்வ விநாயகர் கோயில் அருகே வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் அவரிடம் ரூ. 1000 கேட்டு கத்தி முனையில் மிரட்டினர். அவர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த 3 பேரும் தகாத வார்த்தைகளால் பேசி முகமது கரீமை தாக்கி அவரிடம் இருந்த 500 ரூபாயை பறித்துவிட்டு பறித்து தப்பி சென்றனர். இது குறித்து முகமது கரீம் செல்வபுரம் போலீசில் புகார் அளித்தார். அதில், வியாபாரியை தாக்கி பணம் பறித்தது தெலுங்குபாளையம் உடையார் தெருவை சேர்ந்த கார்த்திகை செல்வம் (27), செல்வபுரம் வடக்கு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த அர்ஜூன் (23), கல்லா மேடு தெற்குஹவுசிங் யூனிட்டை சேர்ந்த பிரகாஷ் (24) என்பது தெரியவந்தது. இதை அடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கத்தி, 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.