கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரனாரின் 153வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அனைத்து மாவட்டங்களிலும் சிதம்பரனாரின் சிலைக்கும் படத்திற்கும் பல்வேறு தரப்பினர் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக கோவையில் வ. உ. சி மைதானத்தில் உள்ள வ. உ. சிதம்பரனாரின் சிலைக்கு கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார்பாடி, மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், மாநகராட்சி மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், துணை மேயர் வெற்றி செல்வன் ஆகியோர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.