இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாக்கத்தான்

85பார்த்தது
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகமாக மொபைல் போன், டிவி, கம்ப்யூட்டர் போன்றவை அதிகமாக பார்ப்பதால் ஏற்படும் விளைவுகள் சம்பந்தமாக Digital Detox விழிப்புணர்வு வாக்கத்தான் கோவை ஆர். எஸ் புரம் சாஸ்திரி மைதானத்தில் துவங்கி ஆர். எஸ் புரம் வழியாக வடகோவை வழியாக 3 கிலோமீட்டர் வாக்கத்தான் நடைபெற்றது.

இதில் கல்லூரி மாணவர், மாணவிகள் மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.

தற்பொழுது டிஜிட்டல் பயன்பாடு அதிகரித்து விட்டதால் குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவரும் டிஜிட்டலுக்கு அடிமையாக்கி விட்டனர். இதனால் பெரும் அளவில் பாதிப்பு ஏற்படுத்த கூடும் என்பதால் இந்த விழிப்புணர்வு வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது.

டிஜிட்டல் நம் தேவைக்கேற்ப பயன்படுத்தாமல் அதிகளவில் பயன்படுத்துவதால் பல்வேறு மன உளைச்சல், பிரச்சனைகளை இன்றைய தலைமுறை எதிர்கொண்டு வருகின்றனர் எனவே எல்லாவற்றையும் அளவாய் பயன்படுத்தினால் எந்தவித பிரச்சினையும் ஏற்படாது.

தொடர்புடைய செய்தி