வானதி சீனிவாசன் எம் எல் ஏ பேட்டி

67பார்த்தது
இந்த அமைப்பு டெல்லி அமைப்பு. இவர்கள் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய திமுக அரசு எப்படி எல்லாம் அவர்களது புறக்கணிப்பாலும் அலட்சியத்தாலும் மாநிலத்தின் வளர்ச்சியை எவ்வாறு பாதித்துள்ளார்கள் என்று விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளார்கள் எனவும் தெரிவித்தார். விவசாயம் பிரதானமாக இருக்கக்கூடிய இங்கு எவ்வாறு விவசாயத்தை இந்த மாநில அரசு புறக்கணிக்கிறது எனவும், நீர்வள மேலாண்மையில் மத்திய அரசு வழங்கியுள்ள இடங்களில் மாநில அரசு அந்தப் பணிகளை செய்யாமல் விட்டதால் விவசாயத்திற்கான நீர் ஆதாரம் குறைகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். தமிழகத்தில் ஆன்மீக சுற்றுலாவிற்கு வருகின்ற வருவாய் தான் அதிகமாக இருப்பதாக தெரிவித்த அவர், பாரம்பரியத்திற்கு மதிப்பு கொடுக்காமல் கோவில்களை இடிப்பது கோவில்களுக்கு எதிராக பேசுவது சனாதன தர்மத்தை அழிப்பதாக கூறுவது என தமிழகத்தில் இந்து பாரம்பரியத்திற்கு எதிராக திமுக அரசு செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். இது அவர்களின் சித்தாந்தத்திற்கு எதிராக இருந்தாலும் கூட மக்கள் வாக்களித்து அரசாங்கம் அமைகின்ற பொழுது அந்த அரசு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க கூடிய அரசாக இருக்க வேண்டும் என்றார்.

தொடர்புடைய செய்தி